சபரிமலையில் 39 நாட்களில் 223 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் சபரி மலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் நேற்று முன்தினம் வரை 29 லட்சம் பக்தர்கள் வந்துள்ளனர். மகரவிளக்கு கால ஏற்பாடுகளை செய்ய கேரள தலைமை செயலர் தலைமையில் கோட்டயம், இடுக்கி, பத்தணந்திட்டா மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் விரைவில் நடக்க உள்ளது.
இந்நிலையில், கடந்த 39 நாட்களில் சபரிமலை வருமானம் 223 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதில், 90 கோடி ரூபாய் காணிக்கையாக கிடைத்தது என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அனந்தகோபன் கூறினார்.














