பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சபரிமலையில் வருகின்ற 13ஆம் தேதி நடை திறக்கப்பட உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் கோவில் நடை மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்காக திறக்கப்படுவதை தவிர்த்து மாதத்தில் ஐந்து நாட்கள் திறக்கப்பட்டு பூஜை நடைபெறும். இவை தவிர விஷு, ஓனம் பண்டிகை மற்றும் பங்குனி உத்திர திருவிழாவின் போது நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். அதன்படி வருகின்ற பதினொன்றாம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பங்குனி மாத பூஜை மற்றும் உத்திரத் திருவிழாவை முன்னிட்டு திறக்கப்பட உள்ளது. அதன் மறுநாள் முதல் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 18ஆம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. பின்னர் பங்குனி உத்திரத் திருவிழா 16ஆம் தேதி தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. 25ஆம் தேதி பத்தாம் திருநாளில் பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெற உள்ளது. அன்று கொடி இறக்கபட்டு பத்து நாள் திருவிழா நிறைவு பெற்று இரவு பூஜைகளுக்கு பிறகு கோவில் நடை அடைக்கப்படும்.














