முன்னாள் கூகுள் ஊழியர்கள் தொடங்கும் புதிய நிறுவனம்

February 21, 2023

கூகுள் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மேலாளர் ஒருவர், மேலும் 6 முன்னாள் கூகுள் ஊழியர்களுடன் இணைந்து, புதிய நிறுவனம் ஒன்றை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கூகுள் நிறுவனத்தில் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களுக்கான அனுபவங்கள் துறையில் ஹென்றி கிர்க் பணியாற்றி வந்தார். கடந்த 8 ஆண்டுகளாக கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவருக்கு, ஜனவரி 20ஆம் தேதி பிங்க் ஸ்லிப் வழங்கப்பட்டது. அவரது இறுதி நாளுக்கு அடுத்த 60 நாட்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனவே, அவர், மார்ச் […]

கூகுள் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மேலாளர் ஒருவர், மேலும் 6 முன்னாள் கூகுள் ஊழியர்களுடன் இணைந்து, புதிய நிறுவனம் ஒன்றை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கூகுள் நிறுவனத்தில் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களுக்கான அனுபவங்கள் துறையில் ஹென்றி கிர்க் பணியாற்றி வந்தார். கடந்த 8 ஆண்டுகளாக கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவருக்கு, ஜனவரி 20ஆம் தேதி பிங்க் ஸ்லிப் வழங்கப்பட்டது. அவரது இறுதி நாளுக்கு அடுத்த 60 நாட்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனவே, அவர், மார்ச் மாத இறுதிக்குள் புதிதாக ஒரு நிறுவனத்தை தொடங்க முடிவெடுத்து செயல்பட்டு வருகிறார்.

அவரது நிறுவனம், புத்தாக்க நிறுவனங்களுக்கான வாய்ப்புகள், நிதி சார்ந்த தேவைகள் மற்றும் பொறியியல் சார்ந்த வடிவமைப்பு திட்டங்கள் ஆகியவற்றை வழங்குவதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் கொண்டு, பிற நிறுவனங்களின் செயலிகள் மற்றும் வலைத்தளங்களுக்கு வடிவமைப்புகள் மற்றும் ஆராய்ச்சி தேவைகளை இவரது புதிய நிறுவனம் மேற்கொள்ளும் என்று கருதப்படுகிறது. அத்துடன், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் சேவையையும் அவர் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu