ஆழமான ஞானம், துணிச்சலான குரல், தெளிவான பார்வை ஆகியவற்றுக்காக “க்ரேட்டர் விழா 2025”-ல் சத்குருவுக்கு “ப்ளூ டங்” விருது வழங்கப்பட்டது.
ஜெர்மனியின் கொலோன் நகரில் நடைபெற்ற ‘க்ரேட்டர் விழா 2025’ நிகழ்ச்சியில் ஈஷா நிறுவனர் சத்குரு “ப்ளூ டங்” விருதுக்கு தேர்வாகி பெருமைப்படுத்தப்பட்டார். உலக அளவில் சுயமுன்னேற்றம் குறித்து பேசும் நிகழ்வுகளில் முக்கியமானதாக இந்த விழா கருதப்படுகிறது. முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, எழுத்தாளர் டோனி ராப்பின்ஸ் ஆகியோரும் இதற்கு முன் கலந்து கொண்டுள்ளனர். “சத்குரு தனது வார்த்தைகள் மூலம் மனித மனங்களில் விழிப்பு ஏற்படுத்தும் ஆற்றலுள்ளவர்” என க்ரேட்டர் நிறுவனம் புகழ்ந்தது. ஏற்கனவே ‘குளோபல் இந்தியன் விருது’ பெற்ற சத்குருவின் ஆனந்தத்தையும் நறுமணத்தையும் உலகமே விரும்பி ஏற்கிறது என்பது இந்த விருதின் வாயிலாக மீண்டும் உறுதி செய்யப்படுகிறது.