ஜே எஸ் டபிள்யூ நிறுவனத்தின் சேர்மன் சாஜன் ஜிந்தால், எம் ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தில் 45 முதல் 48% பங்குகளை வாங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன் மூலம், நிறுவனத்தின் 51% பொது பங்குகள் இந்தியா வசம் இருக்கும். அடுத்ததாக, 49% பங்குகள் சீனாவிடம் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே, எம் ஜி மோட்டார்ஸ் ஒரு இந்திய நிறுவனமாக மாறும். அதன்படி, அடுத்த சில ஆண்டுகளில் இந்திய பங்குச் சந்தையில் இடம்பெறும். எனவே, இந்த பங்குகள் வாங்கப்படுவதை இந்திய அரசு வரவேற்று உள்ளது.
அண்மையில், இது தொடர்பாக விவாதிக்க, ஜிந்தால் மற்றும் அவரது மகன் பார்த் ஆகியோர், சீனா சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அவர்கள் SAIC தலைமை அதிகாரிகளுடன் பல மாதங்கள் விவாதித்து, இந்த திட்டத்திற்கு ஒப்புதல் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த 4 மாதங்களுக்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும், தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.