'ஆவின்' பொருட்கள் விற்பனை சரிவு: அதிகரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

September 3, 2022

'ஆவின்' பொருட்கள் விற்பனை குறைந்துள்ளதால் அவற்றை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனம் மூலம் பால் மட்டுமின்றி வெண்ணெய், நெய், பன்னீர் உள்ளிட்ட 200 வகையான பால் உப பொருட்கள் விற்கப்படுகின்றன. இவை ஆவின் நேரடி விற்பனை நிலையங்கள் மட்டுமின்றி தனியார் பாலகம், சூப்பர் மார்க்கெட், மளிகை மொத்த விற்பனை கடைகளிலும் விற்கப்படுகின்றன. தனியார் பால் விலை உயர்வால் ஆவின் பால் விற்பனை அதிகரித்துள்ளது. பாலை அதிக விலைக்கு கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு […]

'ஆவின்' பொருட்கள் விற்பனை குறைந்துள்ளதால் அவற்றை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆவின் நிறுவனம் மூலம் பால் மட்டுமின்றி வெண்ணெய், நெய், பன்னீர் உள்ளிட்ட 200 வகையான பால் உப பொருட்கள் விற்கப்படுகின்றன. இவை ஆவின் நேரடி விற்பனை நிலையங்கள் மட்டுமின்றி தனியார் பாலகம், சூப்பர் மார்க்கெட், மளிகை மொத்த விற்பனை கடைகளிலும் விற்கப்படுகின்றன.

தனியார் பால் விலை உயர்வால் ஆவின் பால் விற்பனை அதிகரித்துள்ளது. பாலை அதிக விலைக்கு கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு விற்பதால், ஆவின் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதை ஈடுசெய்ய புதிய பால் பாக்கெட் விற்பனையை ஆவின்நிறுவனம் துவங்கிஉள்ளது. மேலும், ஆவின் உப பொருட்கள் விற்பனை கணிசமாக குறைந்து வருகிறது.
இதுகுறித்து ஆவின்அதிகாரிகள் கூறுகையில், ஆவின் பால் உப பொருட்களை வாங்கி விற்கும் பாலகம் நடத்துவோரிடம் மின்னணு முறையில் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பலரால் தினமும் அவ்வாறு பரிவர்த்தனை செய்யமுடிவதில்லை.

மேலும், பொருட்களை வாங்கியதும் பணம் செலுத்த அறிவுறுத்தப்படுகின்றனர். தனியார் நிறுவனங்களை போல பணத்தை செலுத்த அவகாசம் வழங்குவதில்லை. இதனால், ஆவின் பாலை தவிர மற்ற உப பொருட்களை வாங்க பாலகம் நடத்துவோர் ஆர்வம் காட்டுவதில்லை.

நாள்தோறும் ஆவின் பொருட்கள் விற்பனையாகாமல், உற்பத்தி பிரிவிலேயே வீணாகிறது. தற்போது, இப்பொருட்கள் விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு ஆவின் பாலகத்திற்கும் வாரத்திற்கு இரண்டு முறை 5,000 ரூபாய்க்கு மேல் பொருட்களை கொள்முதல் செய்ய வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறினர்.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu