ஓபன் ஏஐ நிறுவனர் சாம் அல்ட்மேன் தனது 50% சொத்து மதிப்பை நன்கொடையாக வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
உலகில் உள்ள பெரும்பாலான பணக்காரர்கள், ‘கிவிங் பிலெட்ஜ்’ என்ற தன்னார்வ அமைப்பில், தங்கள் சொத்துக்களின் பெரும் பங்கை நன்கொடையாக வழங்குகின்றனர். பில்கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட் ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்த தன்னார்வ அமைப்பு, மனித சமூகத்துக்கு தேவையான தொழில்நுட்ப வளர்ச்சியை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த அமைப்புக்கு தனது 50% சொத்து மதிப்பை நன்கொடையாக வழங்குவதாக ஓபன் ஏஐ நிறுவனர் சாம் அல்ட்மேன் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில், அவரது சொத்து மதிப்பு 100 கோடி அமெரிக்க டாலர்கள் ஆகும்.