ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஆகிறார் சம்பாய் சோரன்

February 1, 2024

ஜார்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் மீது பண மோசடி வழக்கில் அமலாக்க துறையினர் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இது தொடர்பாக தொடர்ந்து பத்து முறை சமன் அனுப்பியும் அவர் பதில் ஏதும் அளிக்காததால் அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய ஹேமந்த் சோரன் முடிவு செய்துள்ளார். […]

ஜார்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் மீது பண மோசடி வழக்கில் அமலாக்க துறையினர் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இது தொடர்பாக தொடர்ந்து பத்து முறை சமன் அனுப்பியும் அவர் பதில் ஏதும் அளிக்காததால் அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய ஹேமந்த் சோரன் முடிவு செய்துள்ளார். பின்னர் ஹேமந்த் சோரன் மற்றும் அவருடன் கூட்டணியில் உள்ள கட்சிகளின் எம்எல்ஏக்களும் ஆளுநர் மாளிகை சென்றனர். அப்போது ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார். கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவரான சாம்பாய் சோரன் ஜார்கண்ட் மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை காங்கிரஸ் கட்சி உறுதி செய்துள்ளது. இதனை தொடர்ந்து தன்னை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க கோரி ஆளுநரிடம் உரிமை கோரி உள்ளார். மேலும் தனக்கு 43 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளது ஆகவும் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu