நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் வெற்றி

February 5, 2024

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் இன்று சம்பாய் சோரன் வெற்றி பெற்றுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் ஊழல் மற்றும் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் சம்பாய் சோரன் முதல்வராக பதவியேற்றார். மேலும் சம்பாய் சோரன் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டு இருந்தார். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பில் சம்பாய் சோரன் மொத்தமுள்ள 81 சட்டமன்ற […]

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் இன்று சம்பாய் சோரன் வெற்றி பெற்றுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் ஊழல் மற்றும் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் சம்பாய் சோரன் முதல்வராக பதவியேற்றார். மேலும் சம்பாய் சோரன் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டு இருந்தார். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பில் சம்பாய் சோரன் மொத்தமுள்ள 81 சட்டமன்ற தொகுதிகளில் 47 எம்எல்ஏக்களின் ஆதரவு பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் இவர் தனது முதல்வர் பதவியை தக்க வைத்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu