சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் பதிவு: போராட்டத்திற்கு முடிவு

January 28, 2025

சாம்சங் தொழிலாளர்கள் சங்கம் பதிவு செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் ஊதிய உயர்வு மற்றும் புதிய தொழிலாளர் சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன், சிஐடியு ஊழியர்கள் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல பேச்சுவார்த்தைகளின் பின்னர், சிஐடியு தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் எடுத்தனர், இது சாம்சங் இந்தியா நிறுவனத்தினால் வரவேற்றப்பட்டது. அப்பொழுது, தொழிலாளர்கள் தங்களது சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை […]

சாம்சங் தொழிலாளர்கள் சங்கம் பதிவு செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் ஊதிய உயர்வு மற்றும் புதிய தொழிலாளர் சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன், சிஐடியு ஊழியர்கள் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல பேச்சுவார்த்தைகளின் பின்னர், சிஐடியு தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் எடுத்தனர், இது சாம்சங் இந்தியா நிறுவனத்தினால் வரவேற்றப்பட்டது. அப்பொழுது, தொழிலாளர்கள் தங்களது சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யும் கோரிக்கையுடன், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் விண்ணப்பம் செய்தனர், ஆனால் அது ஏற்கப்படவில்லை. இதனையடுத்து, அவர்கள் இந்த கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். தற்போது, தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தை பதிவு செய்ய முறைப்படி அனுமதி வழங்கியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu