சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் போல்ட் 6 மடக்கு கைபேசி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கைபேசி உடன் இணைந்து இசட் ஃபிளிப் 6 என்ற மற்றொரு கைபேசியும் சாம்சங் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு கைபேசிகளிலும் பல்வேறு செயற்கை நுண்ணறிவு சார்ந்த நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
சாம்சங் கேலக்ஸி இசட் போல்ட் 6 கைபேசி, ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தில் செயல்படுகிறது. இதில் 7.6 இன்ச் பிரதான டிஸ்ப்ளே மற்றும் 6.3 இன்ச் வெளிப்புற டிஸ்ப்ளே உள்ளது. பிரதான டிஸ்ப்ளேவில் 4 மெகாபிக்சல் கேமராவும், முன்பக்கத்தில் 10 மெகாபிக்சல் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. பின்பக்கத்தில் 50 மெகாபிக்சல் கொண்ட பிரதான கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கைபேசி 12 ஜிபி ரேம் உடன் 256 ஜிபி / 512 ஜிபி / 1 டிபி ஆகிய மூன்று சேமிப்பு வகையறாக்களில் வெளியாகியுள்ளது. இந்த மடக்கு கைபேசியின் ஆரம்ப விலை 164999 ரூபாய் ஆகும்.