சாம்சங் நிறுவனத்தின் புதிய மடக்கு கைபேசிகள் வெளியீடு

தொழில்நுட்ப உலகில் மிகவும் பிரபலமான சாம்சங் நிறுவனம், நேற்று புதிய மாடல் மடக்கு கைபேசிகளை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 மற்றும் ஃபோல்டு 5 ஆகிய கைபேசிகளின் வெளியீட்டு நிகழ்வு தென் கொரியாவில் நேற்று நடைபெற்றது. கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 மாடல், முந்தைய மாடலை விட தட்டையாகவும், பெரிய டிஸ்ப்ளே உடையதாகவும் அமைந்துள்ளது. மேலும், ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2 சிப்புகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 82000 […]

தொழில்நுட்ப உலகில் மிகவும் பிரபலமான சாம்சங் நிறுவனம், நேற்று புதிய மாடல் மடக்கு கைபேசிகளை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 மற்றும் ஃபோல்டு 5 ஆகிய கைபேசிகளின் வெளியீட்டு நிகழ்வு தென் கொரியாவில் நேற்று நடைபெற்றது.

கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 மாடல், முந்தைய மாடலை விட தட்டையாகவும், பெரிய டிஸ்ப்ளே உடையதாகவும் அமைந்துள்ளது. மேலும், ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2 சிப்புகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 82000 என சொல்லப்பட்டுள்ளது.

கேலக்ஸி இசட் போல்ட் 5 கைபேசியும், ஃபிளிப் 5 போலவே ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2 சிப்புகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், முந்தைய மாடலை விட மிகவும் ஒல்லியானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்பக்க டிஸ்ப்ளேயில், பிரகாசத்தை அதிகரிக்கும் அம்சம் புகுத்தப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது 147571 ரூபாயாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu