சனாதனம் குறித்து பேசியதற்காக பாஜகவினர் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளித்து வருகின்றனர்.
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதானம் குறித்து பேசிய கருத்து நாடு முழுதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் இவர் மீது பாஜகவினர் புகார்கள் அளித்த வண்ணம் உள்ளனர். இது குறித்து அளித்த பேட்டியில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என 100 ஆண்டுகளாக பேசி வருகிறோம். இதை ஒழிக்க நாங்கள் என்ன செய்யாமல் இருக்கின்றோம். மேலும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்தது யார்? சனாதான விவகாரத்தில் பாஜகவினர் அளித்து வரும் புகார்களை நான் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். சனாதானத்தின் உரிய உதாரணம் தற்போது புதிய பாராளுமன்ற திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை அழைக்காதது தான். மேலும் இந்தியா என்னும் பெயரை பாரத் என பெயர் மாற்றம் செய்து விட்டார்களா? என கூறியுள்ளார். அதனை தொடர்ந்து சனாதானம் குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.