இந்தியாவின் வருவாய் செயலாளராக சஞ்சய் மல்ஹோத்ரா பொறுப்பேற்பு

December 1, 2022

இந்திய நிதி அமைச்சகத்தின் வருவாய் பிரிவின் செயலாளராக, மூத்த அதிகாரி சஞ்சய் மல்ஹோத்ரா இன்று பொறுப்பேற்றுள்ளார். இந்தியாவின் வருவாய் செயலாளராக இருந்த தருண் பஜாஜ், நேற்றுடன் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, சஞ்சய் மல்ஹோத்ரா புதிதாக பொறுப்பேற்றுள்ளார். இவர் 1990 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்றார். ராஜஸ்தான் பகுதிகளில் இவர் அதிகாரியாக பணியாற்றி வந்தார். அதன் பின்னர், நிதி சேவைகள் துறையின் செயலாளராக பொறுப்பில் இருந்தார். மேலும், கடந்த அக்டோபர் மாதம் முதல், கூடுதல் சிறப்பு செயலாளராக, […]

இந்திய நிதி அமைச்சகத்தின் வருவாய் பிரிவின் செயலாளராக, மூத்த அதிகாரி சஞ்சய் மல்ஹோத்ரா இன்று பொறுப்பேற்றுள்ளார்.

இந்தியாவின் வருவாய் செயலாளராக இருந்த தருண் பஜாஜ், நேற்றுடன் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, சஞ்சய் மல்ஹோத்ரா புதிதாக பொறுப்பேற்றுள்ளார். இவர் 1990 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்றார். ராஜஸ்தான் பகுதிகளில் இவர் அதிகாரியாக பணியாற்றி வந்தார். அதன் பின்னர், நிதி சேவைகள் துறையின் செயலாளராக பொறுப்பில் இருந்தார். மேலும், கடந்த அக்டோபர் மாதம் முதல், கூடுதல் சிறப்பு செயலாளராக, வருவாய் துறையில் பணியாற்றி வருகிறார். இந்தியா, 2023-24 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் விவாதங்களை தொடங்கியுள்ள நேரத்தில், இவர் வருவாய்த்துறை செயலாளராக பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu