பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்தில் இளம் வீரர்களான சர்பிராஸ்கான், துருவ் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தை வெளியிட்டது. இதில் உள்ளூர் போட்டிகளில் விளையாடத காரணத்தினால் பேட்ஸ்மேன்களான அய்யர், இஷான் கிஷன் ஆகியோர் நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற கிரிக்கெட் வாரியத்தின் உயர்மட்ட கூட்டத்தில் கிரிக்கெட் வாரிய மத்திய ஒப்பந்தத்தில் இளம் வீரர்களான சர்பிராஸ்கான், துருவ் ஆகியோர் சேர்க்கப்பட அங்கீகாரம் வழங்கப்பட்டது. இவர்கள் 1 கோடிக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.