பூமியைப் போலவே சனி கிரகத்திலும் தென்படும் ஆரோராக்கள் - நாசா புகைப்படம் பகிர்வு

November 17, 2023

சூரியனின் சக்தி வாய்ந்த கதிர்கள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைகையில், துருவப் பகுதிகளில் துருவ ஒளிகள் எனப்படும் ஆரோராக்கள் தென்படும். இதே போன்ற ஆரோரா நிகழ்வுகள், பூமியைப் போலவே சனி கிரகத்திலும் ஏற்படுவதாக நாசா தெரிவித்துள்ளது. மேலும், சனி கிரகத்தில் தென்படும் ஆரோரா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி சனி கிரகத்தில் ஆரோராக்கள் தென்படுவதை புகைப்படம் எடுத்துள்ளது. கடந்த 2004 ஜனவரி மாதத்தில் எடுக்கப்பட்ட சனி கிரக ஆரோரா புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. மேலும், “பூமியில் […]

சூரியனின் சக்தி வாய்ந்த கதிர்கள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைகையில், துருவப் பகுதிகளில் துருவ ஒளிகள் எனப்படும் ஆரோராக்கள் தென்படும். இதே போன்ற ஆரோரா நிகழ்வுகள், பூமியைப் போலவே சனி கிரகத்திலும் ஏற்படுவதாக நாசா தெரிவித்துள்ளது. மேலும், சனி கிரகத்தில் தென்படும் ஆரோரா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி சனி கிரகத்தில் ஆரோராக்கள் தென்படுவதை புகைப்படம் எடுத்துள்ளது. கடந்த 2004 ஜனவரி மாதத்தில் எடுக்கப்பட்ட சனி கிரக ஆரோரா புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. மேலும், “பூமியில் நிகழ்வது போலவே இது தெரிந்தாலும், சனி கிரக ஆரோராக்கள் பல நாட்களுக்கு நீடிப்பதாக உள்ளது” என தெரிவித்துள்ளது. பொதுவாக, பூமியில், சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரங்களுக்கு மட்டுமே ஆரோராக்கள் தென்படும். எனவே, சனி கிரகத்தின் வளிமண்டல அமைப்பு குறித்த பல்வேறு தகவல்கள், இந்த ஆரோராக்கள் மூலம் கிடைத்து வருவதாக நாசா தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu