‘சனி கோளின் இறந்த நட்சத்திரம்’ என்று அழைக்கப்படும் மிமாஸ் நிலவில் மிகப்பெரிய கடல் மறைந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான ஆய்வறிக்கையை நேச்சர் என்ற ஆய்விதழில் வெளியிட்டுள்ளனர்.
நிமாஸ் என்ற சனி கிரக நிலவு 400 கிலோமீட்டர் விட்டமுடையது. இதன் மேற்பரப்பில் அதிகமான கிரேட்டர்கள் இருந்ததால், இதற்குள் கடல் இருக்கும் என்பது இதற்கு முன்னால் அறியப்படவில்லை. இந்த கடல் 5 முதல் 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியிருக்கலாம். விண்வெளி சார்ந்த கணக்குகளின் படி இது மிகக் குறைந்த காலம் ஆகும். எனவே, இது குறித்த கூடுதல் ஆய்வுகளை மேற்கொள்ளும் போது, பூமியில் உயிர்கள் தோன்றியதற்கான முக்கிய காரணம் கிடைக்கக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.