சவுதி அரேபியாவை சேர்ந்த மனகல் அல் ஒதைபி என்ற பெண், பெண்ணுரிமை கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் மீது பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் சவுதி அரேபியா சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மனகல் அல் ஒதைபி சவுதி அரேபியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் மீது சவுதி அரேபியா எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் ஏ எல் க்யு எஸ் டி ஆகிய சர்வதேச அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. “கடந்த 2022 நவம்பரில் மனகல் அல் ஒதைபி கைது செய்யப்பட்டார். அப்போது சிறையில் சித்திரவதைகளை அனுபவித்து வந்த அவர், உடல் மற்றும் மனரீதியாக மிகவும் பாதிப்படைந்துள்ளார். ஆனால், அவருக்கு மருத்துவ சிகிச்சையும் மறுக்கப்பட்டுள்ளது” - இவ்வாறு அந்த அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.