மத்திய கிழக்கு ஆசியா பகுதியில் ஈரான் மற்றும் சவுதி அரேபியா இடையே அதிகாரத்தை கைப்பற்றுவதில் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவை மேம்படுத்த சீனா அரசியல் தூதராக செயல்பட்டு வருகிறது. தற்போது சீனாவின் முயற்சிகளின் பலனாக, மூடப்பட்டுள்ள தூதரகங்களை திறப்பதற்கு ஈரான் மற்றும் சவுதி அரேபியா நாடுகள் சம்மதம் வழங்கியுள்ளன.
சீன தலைநகர் பீஜிங்கில், தலைவர்கள் சந்திப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியா மற்றும் ஈரான் நாட்டு வெளியுறவு துறை அமைச்சர்கள் இந்த தகவலை வெளியிட்டனர். அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், “இருதரப்பு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கு இரு தரப்பிலும் தயார் நிலையில் உள்ளோம். எனவே, முதற்கட்டமாக, ரியாத் மற்றும் தெகரானில் மூடப்பட்ட தூதரகங்கள் திறக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.