அபுதாபியில் பறக்கும் டாக்சி வெற்றிகரமாக சோதனை

June 14, 2024

அபுதாபியில் பறக்கும் டாக்ஸி வானில் வெற்றிகரமாக இயக்கப்பட்டு சோதனை நிறைவேறியது. போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், எரிபொருளை சேமிக்கவும் நாடு முழுவதும் பறக்கும் டாக்ஸியை அறிமுகப்படுத்த அமீரகம் முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் அபுதாபியில் பறக்கும் டாக்ஸியை அமெரிக்காவின் ஆச்சர் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பறக்கும் காரின் பெயர் மிட்நைட் ஏர் கிராஃப்ட். இது தற்போது முதல் கட்டமாக அபுதாபி மாநகராட்சிகள் மற்றும் போக்குவரத்து துறை ஒத்துழைப்புடன் வானில் வெற்றிகரமாக இயக்கப்பட்டு சோதனை நிறைவேறியது. இது ஹெலிகாப்டர் போல […]

அபுதாபியில் பறக்கும் டாக்ஸி வானில் வெற்றிகரமாக இயக்கப்பட்டு சோதனை நிறைவேறியது.

போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், எரிபொருளை சேமிக்கவும் நாடு முழுவதும் பறக்கும் டாக்ஸியை அறிமுகப்படுத்த அமீரகம் முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் அபுதாபியில் பறக்கும் டாக்ஸியை அமெரிக்காவின் ஆச்சர் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பறக்கும் காரின் பெயர் மிட்நைட் ஏர் கிராஃப்ட். இது தற்போது முதல் கட்டமாக அபுதாபி மாநகராட்சிகள் மற்றும் போக்குவரத்து துறை ஒத்துழைப்புடன் வானில் வெற்றிகரமாக இயக்கப்பட்டு சோதனை நிறைவேறியது. இது ஹெலிகாப்டர் போல செங்குத்தாக நின்ற இடத்தில் இருந்தே மேலே பறக்கும். அதே போல் விமானம் போல நேராக பயணம் செய்யும். இது மணிக்கு 360 கிலோமீட்டர் வேகத்தில் வானில் பறக்கும். இந்த விமானத்தை பயணிகள் மட்டுமல்லாமல் சரக்குகளை ஏற்றி செல்லவும் பயன்படுத்த முடியும்.

அடுத்த ஆண்டு இது இந்த சேவை அறிமுகப்படுத்தப்படும். அபுதாபி - துபாய் இடையே பயண நேரம் பத்து முதல் 20 நிமிடமாக குறையும். நான்கு பேர் பயணம் செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளியூர்களுக்கு செல்ல 800 முதல் 1500 திர்ஹாம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. வரும் காலங்களில் படிப்படியாக கட்டணங்கள் குறையும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu