ஐநாவின் மனித உரிமை அமைப்பில் இணையும் வாய்ப்பை இழந்தது சவுதி அரேபியா

October 10, 2024

சவுதி அரேபியா, ஐ.நா. மனித உரிமைகள் குழுவில் இடம் பிடிக்க முயன்ற முயற்சியில் தோல்வியடைந்துள்ளது. மனித உரிமை மீறல்கள் குறித்த பல்வேறு குற்றச்சாட்டுகளின் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஐ.நா. சபை 18 புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யும் வாக்கெடுப்பில், சவுதி அரேபியா போதுமான வாக்குகளைப் பெறவில்லை. இந்த வாக்கெடுப்பில், தாய்லாந்து, சைப்ரஸ், கத்தார், தென்கொரியா மற்றும் மார்ஷல் தீவு ஆகிய நாடுகள் வெற்றி பெற்றுள்ளன. ஐ.நா.வுக்கான மனித உரிமை கண்காணிப்பு இயக்குனர் லூயிஸ் சார்போன்னோ, சவுதி […]

சவுதி அரேபியா, ஐ.நா. மனித உரிமைகள் குழுவில் இடம் பிடிக்க முயன்ற முயற்சியில் தோல்வியடைந்துள்ளது. மனித உரிமை மீறல்கள் குறித்த பல்வேறு குற்றச்சாட்டுகளின் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. சபை 18 புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யும் வாக்கெடுப்பில், சவுதி அரேபியா போதுமான வாக்குகளைப் பெறவில்லை. இந்த வாக்கெடுப்பில், தாய்லாந்து, சைப்ரஸ், கத்தார், தென்கொரியா மற்றும் மார்ஷல் தீவு ஆகிய நாடுகள் வெற்றி பெற்றுள்ளன. ஐ.நா.வுக்கான மனித உரிமை கண்காணிப்பு இயக்குனர் லூயிஸ் சார்போன்னோ, சவுதி அரேபியா மனித உரிமைகள் குழுவில் இடம் பெற தகுதியற்றது என தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. சவுதி அரேபியா மீதான குற்றச்சாட்டுகளில், ஏமன் எல்லையில் புலம்பெயர்ந்தோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் பத்திரிகையாளர் ஜமால் காஷோகி கொலை ஆகியவை முக்கியமானவை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu