தனி பாலஸ்தீன தேசம் அமையாவிட்டால் இஸ்ரேலை அங்கீகரிக்கமாட்டோம் - சவுதி அரேபியா

January 23, 2024

தனி பாலஸ்தீன தேசம் அமைக்கப்பட வேண்டும். இல்லையேல், இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்கப் போவது கிடையாது என்று சவுதி அரேபியா உறுதியாக கூறியுள்ளது. இஸ்ரேலும், சவுதி அரேபியாவும் நீண்ட காலமாக பகை நாடுகளாக இருந்து வந்தன. இந்நிலையில், அமெரிக்கா எடுத்துக் கொண்ட பெரும் முயற்சியின் காரணமாக இந்த இரு நாடுகளுக்கும் இடையே சுமூக உறவு ஏற்படுவதற்கான சூழல் உருவாகியது. இந்நிலையில் தனி பாலஸ்தீன தேசம் அமைக்க இயலாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறியிருந்தார். இதனை […]

தனி பாலஸ்தீன தேசம் அமைக்கப்பட வேண்டும். இல்லையேல், இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்கப் போவது கிடையாது என்று சவுதி அரேபியா உறுதியாக கூறியுள்ளது.

இஸ்ரேலும், சவுதி அரேபியாவும் நீண்ட காலமாக பகை நாடுகளாக இருந்து வந்தன. இந்நிலையில், அமெரிக்கா எடுத்துக் கொண்ட பெரும் முயற்சியின் காரணமாக இந்த இரு நாடுகளுக்கும் இடையே சுமூக உறவு ஏற்படுவதற்கான சூழல் உருவாகியது. இந்நிலையில் தனி பாலஸ்தீன தேசம் அமைக்க இயலாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறியிருந்தார். இதனை சவுதி அரேபியா கடுமையாக எதிர்க்கிறது. இது குறித்து சவுதி இளவரசரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான ஃபைசல் பின் சவுத் கூறியதாவது, தனி பாலஸ்தீனம் அமைவதற்கான பாதை வகுக்கப்படாவிட்டால் இஸ்ரேலை ஒரு நாடாக சவுதி அரேபியா அங்கீகரிக்காது. இஸ்ரேலுடன் தூதரக உறவை சீர்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படாது. போருக்கு பின் காசா பகுதியில் மறு கட்டமைப்பு பணிகள் நடைபெற சவுதி அரேபியா உதவிகள் செய்யும் என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu