சவுதி அரேபியா இளவரசர் தலால் பின் அப்துலாசிஸ் பின் பந்தர் பின் அப்துலாசிஸ் அல் சவுத் மரணம் அடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி இளவரசர் தலால் பின் அப்துலாசிஸ் பின் பந்தர் பின் அப்துலாசிஸ் அல் சவுத், சவுதி அரேபியா விமான படையில் விமானியாக இருந்து வந்தார். கடந்த டிசம்பர் 7ஆம் தேதி, சவுதி அரேபியாவில் F 15 SA போர் விமானம் விபத்துக்குள்ளாகி நொறுங்கி விழுந்தது. இதனை சவுதி இளவரசர் தான் ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. அவர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த அசம்பாவிதம் நேர்ந்ததாக கூறப்படுகிறது. எனினும், சவுதி அரேபியா அவரது மரணத்துக்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை.