சவுதி அரேபியா - பயங்கரவாதத்தில் ஈடுபட்ட 5 பேருக்கு ஒரே நேரத்தில் தண்டனை

July 4, 2023

சவுதி அரேபியாவில் 5 பேருக்கு ஒரே நேரத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. ஒர்க் ஷாப் ஒன்றின் மீது சரமாரி தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 4 பேர் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள்; ஒருவர் எகிப்தியர் ஆவார். இவர்களுக்கு ஒரே நேரத்தில் தண்டனை அளிக்கப்படுவதன் மூலம், இந்த ஆண்டில் சவுதி அரேபியாவின் மிகப்பெரிய மரண தண்டனை நிறைவேற்றமாக […]

சவுதி அரேபியாவில் 5 பேருக்கு ஒரே நேரத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. ஒர்க் ஷாப் ஒன்றின் மீது சரமாரி தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 4 பேர் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள்; ஒருவர் எகிப்தியர் ஆவார். இவர்களுக்கு ஒரே நேரத்தில் தண்டனை அளிக்கப்படுவதன் மூலம், இந்த ஆண்டில் சவுதி அரேபியாவின் மிகப்பெரிய மரண தண்டனை நிறைவேற்றமாக இது வரலாற்றில் இடம் பிடிக்க உள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு என்ன மாதிரியான மரண தண்டனை விதிக்கப்பட உள்ளது என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இவர்களுடன் சேர்த்து, 2023 ல் இதுவரை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்கிறது. அவர்களுள் 20 க்கும் மேற்பட்டோர் பயங்கரவாத செயல்கள் காரணமாக மரண தண்டனை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சவுதி அரேபியாவில் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வந்தது. கடந்த சில மாதங்களாக, உயிர் போகும் அளவில் குற்றங்கள் செய்தால் மட்டுமே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 5 பேரின் மரண தண்டனை, அந்நாட்டில் மிகப்பெரிய மரண தண்டனையாக பதிவு செய்யப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu