சவுதி அரேபியாவைச் சேர்ந்த அராம்கோ நிறுவனம், கடந்த 2022 ஆம் ஆண்டில் வரலாற்று லாபத்தை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததன் காரணமாக, உலகெங்கும் எரிபொருள் தேவை அதிகரித்தது. எனவே, எண்ணெய் விலைகளில் அதிக உயர்வு கொண்டுவரப்பட்டது. இதன் எதிரொலியாக, உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளரான அராம்கோ, அதிக அளவு லாபம் ஈட்டி உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டில், நிறுவனத்தின் லாபம் 46% உயர்ந்து, 161.1 பில்லியன் டாலர் மதிப்பில் பதிவாகியுள்ளது.
ஷெல், செவ்ரான், எக்சான் மோபில், பிபி, டோட்டல் எனர்ஜிஸ் ஆகிய நிறுவனங்களின் மொத்த லாபத்திற்கு இணையாக, அராம்கோ நிறுவனத்தின் லாபம் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், ஒட்டுமொத்த சவுதி அரேபியாவின் பொருளாதார வளர்ச்சி 8.7% ஆக உயர்ந்துள்ளது. ஜி-20 நாடுகளைப் பொறுத்தவரை, இதுவே அதிகமான பொருளாதார வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.