உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக சவுதி அரேபியாவை சேர்ந்த அராம்கோ நிறுவனம் அறியப்படுகிறது. இந்த நிறுவனம், சீனாவை சேர்ந்த எண்ணை சுத்திகரிப்பு நிறுவனத்தின் 10% பங்குகளை வாங்க உள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. சுமார் 3.6 பில்லியன் டாலர்களுக்கு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, அடுத்த 20 ஆண்டுகளுக்கு, சீனாவை சேர்ந்த ராங்ஷெங் பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கு, நாள் ஒன்றுக்கு 480000 பேரல்கள் கச்சா எண்ணையை அராம்கோ விநியோகிக்கும். மேலும், 800 மில்லியன் டாலர்கள் பணம் இதற்காக கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனாவில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில், நாள் ஒன்றுக்கு 8 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய்யை சுத்திகரிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.