உக்ரைன் போரை நிறுத்த உச்சிமாநாடு ஏற்பாடு செய்கிறது சவுதி அரேபியா

July 31, 2023

உக்ரைன் போரை நிறுத்த ஜெட்டாவில் உச்சிமாநாடு ஏற்பாடு செய்கிறது சவுதி அரேபியா. உக்ரைன்- ரஷ்யா இடையே கடந்த 17 மாதங்களாக போர் நிலவி வருகிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதுவரை பலன் கிடைக்கவில்லை. கோதுமை, பார்லி போன்ற உணவு தானியங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளாக உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளன. இதனால் ஏற்றுமதி பாதிப்படைந்து விலை உயர்ந்துள்ளது. இது உலகப் பொருளாதாரத்தை பாதிப்படையச் செய்கிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையில் […]

உக்ரைன் போரை நிறுத்த ஜெட்டாவில் உச்சிமாநாடு ஏற்பாடு செய்கிறது சவுதி அரேபியா.

உக்ரைன்- ரஷ்யா இடையே கடந்த 17 மாதங்களாக போர் நிலவி வருகிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதுவரை பலன் கிடைக்கவில்லை. கோதுமை, பார்லி போன்ற உணவு தானியங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளாக உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளன. இதனால் ஏற்றுமதி பாதிப்படைந்து விலை உயர்ந்துள்ளது. இது உலகப் பொருளாதாரத்தை பாதிப்படையச் செய்கிறது.

இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உச்சி மாநாடு ஒன்றை நடத்த உக்ரைன் முடிவு செய்துள்ளது. இதன் முன்னேற்பாடாக கடந்த மே மாதம் அரபு லீக் மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்றார். அப்போது அவர் அரபு நாடுகள் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு உதவும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி இதற்கான ஏற்பாடுகளை சவுதி அரசு செய்து வருகிறது. இந்த மாநாடு துறைமுக நகரமான ஜெட்டாவில் நடைபெற உள்ளது. இதில் பிரேசில், இந்தியா உக்ரைன் உட்பட 30 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள். அமெரிக்கா சார்பில் ஜனாதிபதி ஜோ பைடனும் கலந்து கொள்கிறார். இதில் ரஷ்யா பங்கேற்பது குறித்து இன்னும் தகவல் வெளிவரவில்லை. அதோடு இந்த மாநாட்டிற்கான தேதி உட்பட பிற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu