சவுதி அரேபியாவின் புதிய விமான நிறுவனம் - 'ரியாத் ஏர்' அறிமுகம்

March 13, 2023

சவுதி அரேபியா அரசு, சர்வதேச அரங்கில் முன்னேற்றத்தை நோக்கிய பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் திட்டமிடல் படி, 2030 ஆம் ஆண்டுக்கான வளர்ச்சித் திட்டத்தில், ‘ரியாத் ஏர்’ என்ற புதிய விமான போக்குவரத்து நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. நேற்று இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ரியாத் ஏர் விமான போக்குவரத்து மூலம், கிட்டத்தட்ட 100 சர்வதேச இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2030 ஆம் ஆண்டுக்குள், வருடாந்திர பயணிகள் […]

சவுதி அரேபியா அரசு, சர்வதேச அரங்கில் முன்னேற்றத்தை நோக்கிய பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் திட்டமிடல் படி, 2030 ஆம் ஆண்டுக்கான வளர்ச்சித் திட்டத்தில், ‘ரியாத் ஏர்’ என்ற புதிய விமான போக்குவரத்து நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. நேற்று இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

ரியாத் ஏர் விமான போக்குவரத்து மூலம், கிட்டத்தட்ட 100 சர்வதேச இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2030 ஆம் ஆண்டுக்குள், வருடாந்திர பயணிகள் எண்ணிக்கையை 330 மில்லியன் வரை உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், வருடத்திற்கு 5 மில்லியன் டன் அளவில் சரக்கு பரிவர்த்தனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. ரியாத் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக, அபுதாபியைச் சேர்ந்த எதிஹாட் ஏர்வேஸ் முன்னாள் தலைவர் டோனி டக்ளஸ் நியமிக்கப்பட்டுள்ளார்

மேலும், விமான போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கில், சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில், புதிய விமான நிலையத் திட்டம், கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. 57 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், 2030 ஆம் ஆண்டில் 120 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்ட விமான நிலையத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu