முதல்முறையாக பாகிஸ்தான் தேர்தலில் இந்து பெண் மனு தாக்கல்

December 26, 2023

பாகிஸ்தான் தேர்தலில் முதல் முதலாக இந்து சமுதாயத்தை சேர்ந்த ஒரு பெண் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். பாகிஸ்தானில் வருகிற பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி பொது தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நடைபெற்றது. இந்த தேர்தலில் முதல் முதலாக இந்து சமுதாயத்தை சேர்ந்த ஒரு பெண் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவரது பெயர் சவீரா பிரகாஷ். புனர் […]

பாகிஸ்தான் தேர்தலில் முதல் முதலாக இந்து சமுதாயத்தை சேர்ந்த ஒரு பெண் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

பாகிஸ்தானில் வருகிற பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி பொது தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நடைபெற்றது. இந்த தேர்தலில் முதல் முதலாக இந்து சமுதாயத்தை சேர்ந்த ஒரு பெண் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவரது பெயர் சவீரா பிரகாஷ். புனர் மாவட்டத்தில் உள்ள தொகுதியில் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் இவர் போட்டியிடுகிறார். இவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் புனர் மாவட்ட பெண்கள் பிரிவு பொதுச்செயலாளராக உள்ளார். முன்னதாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் 5% பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu