சென்னை மெட்ரோ பயணிகள் National Common Mobility Card (சிங்கார சென்னை அட்டை) மட்டுமே பயன்படுத்த வேண்டும், பழைய பயண அட்டைக்கு ஆதரவு நிறைவடைகிறது.
சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, வரும் ஆகஸ்ட் 1 முதல் பழைய CMRL பயண அட்டைகள் ரீசார்ஜ் செய்ய முடியாது. அதற்குப் பதிலாக, பயணிகள் தேசிய பொதுப் போக்குவரத்து அட்டையை (NCMC – Singara Chennai Card) பயன்படுத்த வேண்டியுள்ளது. தற்போது 41 மெட்ரோ நிலையங்களில் பழைய அட்டைகளுக்கான சேவைகள் நிறுத்தப்பட உள்ளன. பயணிகள் தங்களுடைய பழைய அட்டையில் உள்ள இருப்புத் தொகையை பயணத்திற்கு பயன்படுத்திக்கொண்டு, ரூ.50 க்கும் குறைவாக இருக்கும் நிலையில் அந்த அட்டையை கவுண்டரில் ஒப்படைத்து, இலவசமாக புதிய NCMC அட்டை பெற்றுக்கொள்ளலாம். பழைய அட்டையின் மீதித்தொகையும், வைப்புத்தொகையும் புதிய கார்டுக்கு மாற்றிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. QR சீட்டு மற்றும் பிற பயண முறைகள் தொடர்ந்து கிடைக்கும்.