பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் பத்திர விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது.
உச்சநீதிமன்றம் கடந்த 15ஆம் தேதி தேர்தல் பத்திரங்கள் குறித்த சிறப்பு தீர்ப்பை வழங்கியது. இதில் தேர்தல் நன்கொடை பத்திரம் முறையை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த திட்டத்தின் கீழ் நன்கொடை அளித்தவர்களின் விவரங்களை மார்ச் 6ஆம் தேதிக்குள் பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்திடம் முழுமையாக ஒப்படைக்க வேண்டும். அவற்றை மார்ச் 13ஆம் தேதி மக்கள் பார்வைக்கு தேர்தல் ஆணையம் தன்னுடைய இணையதளத்தில் வெளியிட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் 2019 ஏப்ரல் முதல் இதுவரையிலும் தேர்தல் நன்கோடை பத்திரங்கள் பற்றிய விவரங்களை வழங்குவதற்கு ஜூன் 30-ம் தேதி வரை பாரத ஸ்டேட் வங்கி அவகாசம் கோரி மனு தாக்கல் செய்து இருந்தது. இந்த மனு மீதான விசாரணையில் பாரத ஸ்டேட் வங்கி மனுவினை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் தேர்தல் பத்திர நன்கொடை விவரங்களை இன்று மாலைக்குள் வெளியிட வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்தது ஏன நிலையில் பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் பத்திர விபரங்களை இன்று தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. மேலும் வருகிற 15-ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஸ்டேட் பேங்க் பகிர்ந்துள்ள தகவல்களை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.