பாரத ஸ்டேட் வங்கி நிகர லாபம் 8% உயர்வு

November 6, 2023

பாரத ஸ்டேட் வங்கியின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, வங்கியின் நிகர லாபத்தில் 8% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், பாரத ஸ்டேட் வங்கியின் நிகர லாபம் 143.3 பில்லியன் ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது நிபுணர்களின் கணிப்பை விட சற்று உயர்வாகும். வங்கிக்கு வட்டி மூலமாக கிடைத்த வருவாய் 12.3% உயர்ந்து, 395 பில்லியன் ரூபாய் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், எஸ் பி ஐ வழங்கும் […]

பாரத ஸ்டேட் வங்கியின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, வங்கியின் நிகர லாபத்தில் 8% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், பாரத ஸ்டேட் வங்கியின் நிகர லாபம் 143.3 பில்லியன் ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது நிபுணர்களின் கணிப்பை விட சற்று உயர்வாகும். வங்கிக்கு வட்டி மூலமாக கிடைத்த வருவாய் 12.3% உயர்ந்து, 395 பில்லியன் ரூபாய் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், எஸ் பி ஐ வழங்கும் கடன்கள் மதிப்பு 12.4% உயர்ந்துள்ளதாகவும், வங்கியின் மொத்த வைப்பு நிதி 11.9% உயர்ந்துள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த காலண்டு இறுதியில், எஸ்பிஐ வங்கியின் வாராக்கடன் 2.55% அளவில் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu