பாரத ஸ்டேட் வங்கியின் காலாண்டு லாபம் 13265 கோடி! - வரலாற்று உச்சம்

November 5, 2022

பாரத ஸ்டேட் வங்கி, தனது இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரே காலாண்டில் 13264.62 கோடி ரூபாய் லாபம் ஈட்டி, புதிய வரலாறை படைத்துள்ளது. வங்கியின் காலாண்டு லாபத்தில் இது வரலாற்று உச்சமாகும். வருடாந்திர அடிப்படையில், 24% லாப உயர்வை இந்த வங்கி பதிவு செய்துள்ளது. கடந்த வருடத்தின் இதே காலாண்டில், வங்கியின் நிகர லாபம் 7626.57 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், வங்கியின் மொத்த வருவாய் […]

பாரத ஸ்டேட் வங்கி, தனது இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரே காலாண்டில் 13264.62 கோடி ரூபாய் லாபம் ஈட்டி, புதிய வரலாறை படைத்துள்ளது. வங்கியின் காலாண்டு லாபத்தில் இது வரலாற்று உச்சமாகும். வருடாந்திர அடிப்படையில், 24% லாப உயர்வை இந்த வங்கி பதிவு செய்துள்ளது. கடந்த வருடத்தின் இதே காலாண்டில், வங்கியின் நிகர லாபம் 7626.57 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், வங்கியின் மொத்த வருவாய் 88733.86 கோடியாக பதிவாகியுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், வருவாய் 14% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கடந்த வருடம் வங்கியின் வருவாய் 77689.09 கோடியாக பதிவானது.

பாரத ஸ்டேட் வங்கிக்கு, வட்டி மூலம் கிடைக்கும் வருவாய், 13% அதிகரித்து, 35183 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. கடந்த வருடத்தில் இது 31184 கோடியாக பதிவாகி இருந்தது. மேலும், நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், லாபம் ஈட்டுவதில் 37% வளர்ச்சியை இந்த வங்கி பதிவு செய்துள்ளது. கடந்த இரண்டு காலாண்டுகளில், வங்கியின் நிகர லாபம் 1933 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. இதுவே கடந்த நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், 14131 கோடியாக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், வட்டி மூலம் கிடைக்கும் வருவாய் 13% உயர்ந்து 66379 கோடியாக உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu