பாரத ஸ்டேட் வங்கி காலாண்டு லாபம் 83% உயர்வு

May 18, 2023

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் நான்காம் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளிவந்துள்ளது. அதன்படி, தனிப்பட்ட முறையில் வங்கியின் நிகர லாபம் 83% உயர்வை பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில், வங்கியின் லாபம் 16695 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, வங்கியின் பொது பங்கு ஒன்றுக்கு 11.3 ரூபாய் டிவிடெண்ட் வழங்க வங்கியின் செயற்குழு வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும், டிவிடெண்ட் தொகைக்கான தேதி ஜூன் 14 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் […]

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் நான்காம் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளிவந்துள்ளது. அதன்படி, தனிப்பட்ட முறையில் வங்கியின் நிகர லாபம் 83% உயர்வை பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில், வங்கியின் லாபம் 16695 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, வங்கியின் பொது பங்கு ஒன்றுக்கு 11.3 ரூபாய் டிவிடெண்ட் வழங்க வங்கியின் செயற்குழு வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும், டிவிடெண்ட் தொகைக்கான தேதி ஜூன் 14 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாத இறுதியில், வங்கிக்கு வட்டி மூலம் கிடைத்த வருவாய் 29% உயர்ந்து, 40393 கோடி ரூபாய் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வங்கியின் வாரா கடன் 54% குறைந்து, 3316 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. வங்கியின் என்.பி.ஏ ரேஷியோ 2.78% உயர்ந்துள்ளது. அத்துடன், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், வங்கியின் இயக்கம் மூலமாக கிடைத்த வருவாய் 25% உயர்ந்து 24621 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu