வரலாறு காணாத உச்சத்தில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பங்குகள்

September 14, 2022

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பங்குகள் இன்று வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது. இன்று காலை 11:50 மணி நிலவரப்படி, நிறுவனத்தின் பங்குகள் 3% உயர்ந்து, ஒரு பங்கின் விலை, 574.7 ரூபாய்க்கு வர்த்தகம் ஆனது. இது தேசிய பங்குச் சந்தையின் நிலவரம் ஆகும். அதே சமயத்தில், மும்பை பங்குச் சந்தையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நிறுவனத்தின் பங்கு, 574.65 ரூபாய்க்கு வர்த்தகம் ஆனது. இதன் மூலமாக, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் சந்தை மதிப்பு […]

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பங்குகள் இன்று வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது. இன்று காலை 11:50 மணி நிலவரப்படி, நிறுவனத்தின் பங்குகள் 3% உயர்ந்து, ஒரு பங்கின் விலை, 574.7 ரூபாய்க்கு வர்த்தகம் ஆனது. இது தேசிய பங்குச் சந்தையின் நிலவரம் ஆகும். அதே சமயத்தில், மும்பை பங்குச் சந்தையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நிறுவனத்தின் பங்கு, 574.65 ரூபாய்க்கு வர்த்தகம் ஆனது. இதன் மூலமாக, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் சந்தை மதிப்பு 5 கோடி இலக்கைத் தாண்டியுள்ளது. மேலும், சந்தை மதிப்பு அடிப்படையிலான தரவரிசை பட்டியலில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏழாவதாக இடம்பெற்றுள்ளது.

இதனால், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பங்குகளை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மொத்தம் உள்ள 38 பங்கு பிரிவுகளில், 32 பங்கு பிரிவுகள் மிகுந்த வரவேற்பு பெற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஆச்சரியப்படும் விதமாக, ஒரு பங்கும் விற்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த வாரத்தில், மார்கன் ஸ்டான்லி நிறுவனம், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் பங்கு விலை 675 ரூபாய் வரை அதிகரிக்கும் என்று கூறியிருந்தது. மேலும், கடன் மூலமான நிறுவனத்தின் வளர்ச்சி நடப்பு நிதி ஆண்டில் 13 சதவீதமும், அடுத்த நிதியாண்டில் 15 சதவீதமும் உயரும் என்று கூறியிருந்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu