ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் முன்னாள் ஆதரவாளரான கலாநிதி மாறனுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 380 கோடி ரூபாய் பணத்தை செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வர்த்தக ஒழுங்கு முறைகளை முறையாக பின்பற்றி இந்த பணம் செலுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் தலைமை நீதிபதி பி எஸ் நரசிம்மா ஆகியோர் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
பங்கு பரிமாற்ற விவகாரத்தில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் கலாநிதி மாறனுக்கு 380 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் ஜூன் மாதம் தெரிவித்தது. அடுத்த 4 வாரங்களுக்குள் இதற்கான விரிவான தகவல்களை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டது. ஆனால், அது தவறிய பட்சத்தில், மாறன் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில், இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு இந்த தீர்ப்பு கிடைத்துள்ளதாக மாறன் தரப்பில் தெரிவித்துள்ளனர்.