எஸ்.சி., எஸ்.டி. எனக் கூறி போலிச் சான்றிதழ் பெறுவதைத் தடுக்க விதிகள்: உயர் நீதிமன்றம் உத்தரவு

January 3, 2023

எஸ்.சி., எஸ்.டி. எனக் கூறி போலிச் சான்றிதழ் பெறுவதைத் தடுக்க விதிகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், இதுகுறித்து கடந்த 2016-ம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றமும் விதிகளை வகுத்துள்ளது. சாதிச் சான்றிதழ் கோரும் உண்மையான விண்ணப்பதாரர்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் சான்றிதழ் பெறும் வகையிலும், போலி சான்றிதழ்கள் பெறுவதைத் தடுக்கும் வகையிலும் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் […]

எஸ்.சி., எஸ்.டி. எனக் கூறி போலிச் சான்றிதழ் பெறுவதைத் தடுக்க விதிகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், இதுகுறித்து கடந்த 2016-ம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றமும் விதிகளை வகுத்துள்ளது. சாதிச் சான்றிதழ் கோரும் உண்மையான விண்ணப்பதாரர்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் சான்றிதழ் பெறும் வகையிலும், போலி சான்றிதழ்கள் பெறுவதைத் தடுக்கும் வகையிலும் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்புகளின்படி, அரசாணைகள் அடிப்படையில் 8 வாரங்களில் தமிழக அரசு விதிகளை வகுத்து வெளியிட வேண்டும்.

போலி சான்றிதழ்களை பெறுவதை தடுக்க உரிய சட்டம் இயற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை தமிழக அரசு சட்டம் இயற்றவில்லை. எனவே, சாதிச் சான்று வழங்கக்கூடிய அதிகாரிகளுக்கு நீதிமன்றங்களின் தீர்ப்புகள் குறித்து விழிப்புணர்வு வகுப்புகளை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu