ஆவின் பால் நிறுவனம் ஆரஞ்சு, நீலம், அஜந்தா மற்றும் பசும்பால் என பல்வேறு வகைகளாக தரம் பிரித்து விற்பனை செய்து வருகின்றது.
இதில் பச்சை நிற கவரில் உள்ள பால் 4.5 சதவீத கொழுப்பு சத்துடன் வழங்கப்படுகிறது. மேலும் தனியார் பாலை விட ஆவின் பாலின் விலை குறைவாக இருப்பதால் வேகமாக விற்பனை ஆகிவிடுகின்றன. இது அரை லிட்டர் ரூபாய் 22 க்கு முகவர்களிடம் கிடைக்கிறது கடைகளில் 23க்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்ற பால்களை விட இதன் விலை குறைவாக இருப்பதால் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஆவின் பால் நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே ஆவின் நிறுவனம் இதற்கு சரிசமமான விலையை நிர்ணயித்து சமமான அளவு விநியோகிக்க திட்டமிட்டு அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இந்நிலையில் பச்சை நிற பால் பாக்கெட்டின் உற்பத்தி 10 சதவீதம் குறைந்து பசும்பால் உற்பத்தி 10 சதவீதம் அதிகரித்துள்ளது. எந்தவித அறிவிப்பும் இல்லாமல் பச்சை நிற பாலின் உற்பத்தி குறைந்துள்ளதால் பால் முகவர்கள் பசும்பால் பாக்கெட்டுகளை வலுக்கட்டாயமாக விற்பனை செய்யும் நிலை உருவாகியுள்ளது.