2024 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் அட்டவணை வெளியாகி உள்ளது.
மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஐபிஎல் போட்டி மீதான கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக காணப்பட்ட வந்தது. இந்நிலையில் முதல் 15 நாட்களுக்கான போட்டி அட்டவணை இன்று வெளியாகியுள்ளது. அதில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டும் தற்போது வெளியாகியுள்ளது. 2 ஆம் கட்ட அட்டவணை மக்களவைத் தேர்தல் வெளியான பிறகு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் அணியும் முதல் போட்டியில் மோதுகின்றது. இதனைத் தொடர்ந்து சென்னை அணி 26 ஆம் தேதி குஜராத் அணியுடன் மோதுகிறது. இந்த இரண்டு போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து சென்னை அணி மார்ச் 31ஆம் தேதி டெல்லியிலும், ஏப்ரல் 5ம் தேதி சன்ரைசர்ஸ் அணியுடனும் மோதுகிறது. ஒவ்வொரு அணியும் தலா நான்கு அணியுடன் மோதும் என்ற கணக்கில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.