முதுநிலை மருத்துவ படிப்பு எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
இந்தியாவை பூர்வீகமாக உடைய மருத்துவர்களின் சர்வதேச சங்கத்தின் 13வது ஆண்டு மாநாடு குஜராத்தின் காந்திநகரில் நேற்று முன்தினம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசுகையில், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் நம் நாட்டில் 51 ஆயிரம் எம்.பி. பி.எஸ்., இடங்கள் இருந்தன. இது தற்போது ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்கள் 34 ஆயிரத்தில் இருந்து 64 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
இளநிலை படிக்கும் அனைவரும் முதுநிலை படிக்க வாய்ப்பு தரும் வகையில் இரண்டுக்குமான இடங்கள் சமமாக இருக்கும் வகையில் முதுநிலை படிப்புக்கான இடங்கள் அடுத்த நான்கு ஆண்டுக்குள் உயர்த்தப்படும் என்று கூறினார்.