ஷ்நீடர் எலக்ட்ரிக் நிறுவனம், 300 கோடி ரூபாய் மதிப்பில், தெலுங்கானாவில் 2வது உற்பத்தி நிலையம் அமைக்கிறது

September 29, 2022

ஷ்நீடர் எலக்ட்ரிக் நிறுவனம், தெலுங்கானா மாநிலத்தில், 300 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக நிறுவனத்தின் தலைவர் அணில் சௌத்திரி தெரிவித்துள்ளார். மேலும், தெலுங்கானா மாநிலத் தலைநகரில் அமைந்துள்ள ஜிஎம்ஆர் தொழில் பூங்காவில், 18 ஏக்கர் நிலப்பரப்பில், புதிய தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக அவர் கூறினார். அண்மையில் நடைபெற்ற தொழிற்சாலையின் அடிக்கல் நாட்டு விழாவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த விழாவிற்கு தெலுங்கானா மாநிலத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே டி ராமராவ் தலைமை வகித்தார். […]

ஷ்நீடர் எலக்ட்ரிக் நிறுவனம், தெலுங்கானா மாநிலத்தில், 300 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக நிறுவனத்தின் தலைவர் அணில் சௌத்திரி தெரிவித்துள்ளார். மேலும், தெலுங்கானா மாநிலத் தலைநகரில் அமைந்துள்ள ஜிஎம்ஆர் தொழில் பூங்காவில், 18 ஏக்கர் நிலப்பரப்பில், புதிய தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக அவர் கூறினார். அண்மையில் நடைபெற்ற தொழிற்சாலையின் அடிக்கல் நாட்டு விழாவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த விழாவிற்கு தெலுங்கானா மாநிலத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே டி ராமராவ் தலைமை வகித்தார்.

விழாவில் பேசிய அணில் சௌத்திரி, இந்த முதலீட்டின் மூலம், 1000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கூறினார். அத்துடன், தெலுங்கானா மாநிலத்தில் அமையவிருக்கும் தொழிற்சாலையே, ஷ்நீடர் எலக்ட்ரிக் நிறுவனத்தின் மிகப்பெரிய ஆலையாக இருக்கும் என்றார். விழாவில் பேசிய அமைச்சர் கே டி ராமராவ், "இந்தியாவின் தொழில் துறை உற்பத்தியாளர்களின் மையமாக ஹைதராபாத் மாறும்" என்று கூறினார். மேலும், "இந்த தொழிற்சாலை மூலம், அதிக வருவாய் ஈட்டப்படும், மற்றும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்படும். இதனால், மாநிலத்தின் பொருளாதார நிலை மேம்படும்" என்று தெரிவித்தார்.

ஷ்நீடர் எலக்ட்ரிக் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஜாவித் அகமத் கூறுகையில், "தொடங்கப்பட இருக்கும் இந்த புதிய தொழிற்சாலை, எங்கள் நிறுவனத்தின் 31 வது தொழிற்சாலை ஆகும். இந்த தொழிற்சாலை திட்டம் இரண்டு கட்டமாக நடைபெறும். முதற்கட்டமாக, 2 லட்சம் சதுர அடி பரப்பளவிலான கட்டமைப்பு 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும். இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் 75% ஏற்றுமதி செய்யப்படும்" என்று கூறினார். பிரெஞ்சு நிறுவனமான ஷ்நீடர் எலக்ட்ரிக் நிறுவனத்தின் தூதர் இமானுவேல் லீநைன் பேசுகையில், "எங்கள் நிறுவனம், இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையிலான நட்பு கூட்டணியை நிரூபிக்கிறது. மேலும், இந்தியாவின் வளர்ச்சி இலக்குகளை அடைய எங்கள் நிறுவனம் துணை புரியும்" என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu