78வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் 78வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பள்ளிக்கல்வித் துறை அனைத்து வகையான பள்ளிகளிலும் விழாவை சிறப்பாகக் கொண்டாட உத்தரவு வழங்கியுள்ளது. தேசிய கொடியை சரியான முறையில் ஏற்றுவதற்கு பின்பற்றவேண்டிய அறிவுறுத்தல்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. பள்ளிகள் வண்ண காகிதங்கள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்படும். மேலும், பிளாஸ்டிக் கொடியை தவிர்க்கவும், முக்கிய விருந்தினர்களை அழைக்கும் வாய்ப்பு வழங்கவும் கூறப்பட்டுள்ளது.