தமிழ்நாட்டில் முன்கூட்டியே பள்ளி இறுதி தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டம்

March 15, 2023

வைரஸ் காய்ச்சல் எதிரொலியாக தமிழ்நாட்டில் முன்கூட்டியே பள்ளி இறுதி தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் படிக்க கூடிய 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்வு தொடங்கவுள்ளது. மாணவர்களுக்கு செய்ய கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான முழு அறிவிப்பானது வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஏப்ரல் மாத […]

வைரஸ் காய்ச்சல் எதிரொலியாக தமிழ்நாட்டில் முன்கூட்டியே பள்ளி இறுதி தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் படிக்க கூடிய 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்வு தொடங்கவுள்ளது. மாணவர்களுக்கு செய்ய கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான முழு அறிவிப்பானது வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஏப்ரல் மாத இறுதியில் நடைபெற இருந்த 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தேர்வை முன்கூட்டியே நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. ஏப்ரல் 27-ம் தேதி நடைபெற இருந்த தேர்வை 10 நாட்கள் முன்னதாக ஏப்ரல் 17-ம் தேதி முதல் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu