தமிழகத்தில் சிலன்பகுதிகளில் கனமழை காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கு அரபுக்கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கே நகர்ந்து, இரண்டு நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில், குறிப்பாக சென்னை மற்றும் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிக்கூடங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளுக்கு வார விடுமுறை வழங்கப்பட்ட நிலையில், தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.