தமிழகத்தில் கன மழை காரணத்தினால் திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் படி உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் சிவகங்கை மாவட்டங்களிலும் கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.