சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருவதால் நான்கு மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு முதல் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. மேலும் அதிகாலை மற்றும் காலை இடியுடன் கூடிய கனமழை தொடர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை,செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.