விடிய விடிய பெய்து வரும் கனமழையின் காரணமாக நீலகிரியில் உள்ள நான்கு தாலுகாக்களுக்கு இன்று பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக நீலகிரி மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நீலகிரியின் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் நீலகிரியில் இன்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.














