மணிப்பூரில் தடைகள் தளர்த்தப்பட்ட நிலையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன.
மணிப்பூரில், கடந்த ஆண்டு மே மாதத்தில் குகி மற்றும் மெய்தி இன மக்களுக்கிடையேயான கலவரம் ஏற்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், சமீபத்தில் வன்முறை சம்பவங்கள் குறைந்த நிலையில் தற்போது, கடந்த 11ம் தேதி முதல் மாணவர்களின் போராட்டத்தால் பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு மற்றும் இணைய சேவைகள் தடை செய்யப்பட்டன. இதனால் கடந்த 11ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.