ஒருவர் மனதில் நினைப்பதை கணித்து, வார்த்தைகளாக எழுதக்கூடிய ஹெல்மெட் ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
சிட்னி பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவு பிரிவில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் விஞ்ஞானிகள் புதிய ஹெல்மெட் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது மனதில் நினைக்கும் எண்ணங்களை வார்த்தைகளாக எழுதுகிறது. எங்கு வேண்டுமானாலும் எளிதாக தூக்கிச் செல்லும் வகையில் இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இது, முடக்கு வாதம் அல்லது பேச்சு செயல் இழந்த நோயாளிகள் மனதில் நினைப்பதை தெரிவிக்கும் சிறந்த கருவியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. சுமார் 30 பேர் பங்கேற்ற இந்தக் கருவியின் சோதனையில், 40% துல்லியமாக, மனதில் நினைத்தவற்றை இந்த கருவி கணித்துள்ளது. எலான் மஸ்கின் நியூரோலிங் நிறுவனமும் இதே போன்ற கருவியை வடிவமைத்து வருகிறது. இந்த நிலையில், சிட்னி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த ஹெல்மெட் கருவி மலிவான விலை உடையதாக கூறப்பட்டுள்ளது.