பால்டிக் கடல் பகுதியில் ஒரு கிலோமீட்டர் நீள சுவர் - கற்கால எச்சமாக இருக்கலாம் என கணிப்பு

February 14, 2024

ஜெர்மனியில் உள்ள பால்டிக் கடல் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் நீளமுடைய சுவர் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது கற்காலத்தை சேர்ந்த கட்டிட எச்சமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. விஞ்ஞானிகள் வேறு ஏதோ ஆராய்ச்சிக்காக மல்டி பீம் சோனார் கருவியை இயக்கிய போது இந்த சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 1673 கற்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. மனிதர்களால் நகர்த்த முடியாத எடை கொண்ட கற்கள் கொண்டு, ஒரு மீட்டர் உயரத்திற்கு இந்த சுவர் கட்டப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது […]

ஜெர்மனியில் உள்ள பால்டிக் கடல் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் நீளமுடைய சுவர் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது கற்காலத்தை சேர்ந்த கட்டிட எச்சமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

விஞ்ஞானிகள் வேறு ஏதோ ஆராய்ச்சிக்காக மல்டி பீம் சோனார் கருவியை இயக்கிய போது இந்த சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 1673 கற்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. மனிதர்களால் நகர்த்த முடியாத எடை கொண்ட கற்கள் கொண்டு, ஒரு மீட்டர் உயரத்திற்கு இந்த சுவர் கட்டப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது கிட்டத்தட்ட 971 மீட்டர் அளவுக்கு நீள்கிறது. எனவே, இது இயற்கை பேரிடர்கள் காரணமாகவோ, இயற்கையாக உருவான படிமங்களாகவோ இருப்பதற்கு வாய்ப்பில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 10000 ஆண்டுகளுக்கு முன்பு இது கட்டப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பான தீவிர ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu